டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலி

சேத்துப்பட்டு அருகே டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலியானார்.

Update: 2022-09-09 18:58 GMT

சேத்துப்பட்டு

சொந்த வீடு கட்ட எம்சாண்ட் மணல் ஏற்றி வந்தபோது டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலியாளனார்.

சேத்துப்பட்டு, அருகே உள்ள, செவரப்பூண்டி, கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 41). டிராக்டர் உரிமையாளரான இவர் சொந்த வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அதற்கு தேவையான எம் சாண்ட் மணலை பெரணமல்லூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான குவாரிக்கு சென்று டிராக்டரில் எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார். டிராக்டரை அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக், என்பவர் ஓட்டி வந்தார்.

செவரப்பூண்டி கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த ஆட்டோவுக்கு வழி விடுவதற்காக முயன்றபோது நிலைதடுமாறிய டிராக்டர் சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்ட உரிமையாளர் சரவணன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார், டிரைவர் கார்த்திக் பலத்த காயம் அடைந்தார்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சரவணனின் உடலை சேத்துப்பட்டு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்