அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொள்ளிடம் போலீசார் ஆற்றின் கரையோர கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மாதிர வேளூரில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை போலீசார் வழிமறித்து விசாரித்தனர். விசாரணையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.