அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் செண்பகத்தோப்பு ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து குமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்ததுடன், மணல் ஏற்றி வந்த டிராக்டர் டிரைவர் ராமர் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.