டயர் வெடித்து சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்தது

சேந்தமங்கலம் அருகே சுற்றுலா வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து 8 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-08-27 18:45 GMT

சேந்தமங்கலம்

டயர் வெடித்தது

நாமக்கல் அருகே உள்ள கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் சுரேஷ், ஜீவா, ரத்தினம், சங்கீதா, மது, ரம்யா ஆகியோர் நடன குழுவை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒரு சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை சேலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார்.

சேந்தமங்கலம் வழியாக அந்த சுற்றுலா வேன் காந்திபுரம் புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென வேனின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் சத்தம் போட்டு அலறினர். அதைகண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

8 பேர் காயம்

சம்பவ இடத்திற்கு சேந்தமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் திருச்சி மாவட்டம் பவுத்திரம் தாலுகா வாழசிராமணி மேல தெருவை சேர்ந்த காமேஷ் உள்பட காயமடைந்த 8 பேரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டயர் வெடித்து புறவழிச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததால் நேற்று அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்