ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர் அருகே மனைவியை டீசல் ஊற்றி எரித்துக்கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2023-10-19 10:18 GMT

திருப்பூர்

திருப்பூர் அருகே மனைவியை டீசல் ஊற்றி எரித்துக்கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர்

திருப்பூர் திருமுருகன்பூண்டி ஆத்துப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் கவுதம் (வயது 29). ஆட்டோ டிரைவர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (25). இவர் பெருமாநல்லூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கவுதமுடன் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் லட்சுமி கர்ப்பமானார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சினை தலைதூக்கியது. கடந்த 13-7-2019 அன்று வீட்டில் இருந்தபோது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த கவுதம், வீட்டில் இருந்த டீசலை லட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்டு லட்சுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தார். இதுதொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து பெருமாநல்லூர் போலீசார் கவுதமை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கொலைமுயற்சி செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், மனைவியை கொடுமைப்படுத்திய குற்றத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2,500 அபராதம் விதித்தும், இதை ஏக காலத்தில் கவுதம் அனுபவிக்குமாறு நீதிபதி பாலு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.


Tags:    

மேலும் செய்திகள்