திருவாரூர்:
திருவாரூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் மாணவர்களை அழைத்து வர பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருவாரூர் நகர் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை அழைத்து கொண்டு பள்ளி வேன் கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் வந்தது. அப்போது திடீரென்று வேனின் முன்பக்க டயர் பழுதானது. இதனை அறிந்த டிரைவர் சாமர்த்தியமாக வேனை சாலையோரத்தில் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.