டயர் வெடித்து லாரி கவிழ்ந்தது

ஆம்பூர் அருகே டயர் வெடித்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-09-22 13:29 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து சென்னைக்கு பழைய துணிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரியின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்த லாரியை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்