காப்பர் ஒயர் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஓட்டப்பிடாரத்தில் காப்பர் ஒயர் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலலட்சுமிபுரம் பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து ரூ.14 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் மற்றும் அலுமினிய பொருட்களை திருடிய வழக்கில் ஓட்டப்பிடாரம் கீழ வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பாபாதோன் சிங் மகன் சஞ்சய் சிங் என்ற மணி (வயது 39) என்பவரை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர்.
அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சஞ்சய் சிங் என்ற மணியை கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.