வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி, ஜூன்.8-
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம், செல்போனை வழிப்பறி செய்த வழக்கில் தாஜிதின் (23) என்பவரை கே.கே.நகர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இவர் மீது திண்டுக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை திருச்சி மத்திய சிறையில் உள்ள அவரிடம் போலீசார் நேற்று வழங்கினார்கள்.