கஞ்சா வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-06-25 13:50 GMT

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சொக்கநாதபுரத்தை சேர்ந்த குமரேசன் (வயது 37), சீலையம்பட்டியை சேர்ந்த அப்துல்லா (62) ஆகிய 2 பேரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில், குமரேசன், அப்துல்லா ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் உள்ள இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை காவலில் வைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்