வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பணகுடி அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பணகுடி அருகே உள்ள விஸ்வநாதபுரம் பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த மகேஸ்வரன் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம், மாதவபுரத்தை சேர்ந்த மீனாட்சிநாதன் (வயது 24), என்பவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதனால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று மீனாட்சிநாதனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மீனாட்சிநாதன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி நேற்று வழங்கினார்.