குன்றக்குடி, திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி பகுதியில் தொல் நடைக்குழுவினர் ஆய்வு

குன்றக்குடி, திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி பகுதியில் தொல் நடைக்குழுவினர் ஆய்வு

Update: 2022-10-17 18:30 GMT

திருப்பத்தூர்

சிவகங்கை தொல்நடை குழுவினர் குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர் ஆகிய பகுதியில் உள்ள கோவில்களில் மரபு சார்ந்த சுற்றுபயணம் சென்றனர். நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தரராஜன், நல்லாசிரியர் கண்ணப்பன், துணைத்தலைவர் முனீஸ்வரன், கள ஆய்வாளர் சரவணன், செயலாளர் நரசிம்மன், துணை செயலாளர் முத்துக்குமரன் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர். இதுகுறித்து இந்த தொல் நடைக்குழு நிறுவனர் காளிராஜா கூறியதாவது, குன்றக்குடியில் 7-வது நூற்றாண்டு குடவரை கோவிலும், பிள்ளையார்பட்டியில் விநாயகர் புடைப்பு சிற்பம் மற்றும் கல்வெட்டுகளும், நாயக்கர் காலத்து கட்டுமான பணியும், ஞானியர் மலையில் சமணர் படுகை, தமிழ் பிராமி எழுத்துக்களை ஆய்வு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்