குடிநீர் குழாய் வால்வு திருட்டு

குடிநீர் குழாய் வால்வு திருட்டு போனது.

Update: 2023-06-12 20:19 GMT

அருப்புக்கோட்டை, 

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவர் அருப்புக்கோட்டை நகராட்சியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த பணிகளுக்கு தேவையான பொருட்களை அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள அழகர்சாமி என்பவர் இடத்தில் குடோன் அமைத்து வைத்திருந்தார். அதற்கு பொறுப்பாளராக விருதுநகரை சேர்ந்த அம்சராஜ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் செல்லப்பாண்டியன் குடோனில் உள்ள பொருட்களை சரிபார்த்த போது அதில் இருந்த குடிநீர் குழாய் வால்வுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்லப்பாண்டியன் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்