வீட்டில் இருந்த விலை உயர்ந்த மரகதலிங்கம் திருட்டு

கரூர் அருகே வீட்டில் இருந்த விலை உயர்ந்த மரகதலிங்கம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-06 18:37 GMT

பூஜை பொருட்கள்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சந்திரமவுலி (வயது 64). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது உறவினர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர் தனது வீட்டில் விலை உயர்ந்த மரகதலிங்கம், படிகலிங்கம், சாமிக்கு அணிவித்திருந்த 8 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்களை பூஜை அறையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சந்திரமவுலி உடல்பரிசோதனை செய்வதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து சந்திரமவுலி கிருஷ்ணராயபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

மரகதலிங்கம் திருட்டு

அப்போது வீட்டின் பூஜை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த மரகதலிங்கம், படிகலிங்கம், சாமி படத்திற்கு அணிவித்திருந்த தங்கதாலி, தங்க செயின், வெள்ளி பொருட்கள் என 27 வகையான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து சந்திரமவுலி மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்