நகைக்கடையில் துளையிட்டு வெள்ளி பொருட்கள் திருட்டு

ஆத்தர் அருகே நகைக்கடையில் துளையிட்டு வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-10-23 19:30 GMT

ஆத்தூர்:-

ஆத்தர் அருகே நகைக்கடையில் துளையிட்டு வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி போலீசார் தேடி வருகிறார்கள்.

நகைக்கடை

ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரையில் தம்மம்பட்டி மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருபவர் ராமசாமி (வயது 54). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று காலை வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்புறம் சுவற்றில் துளையிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் இருந்த ½ கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு போய் இருந்தது.

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து அவர் மல்லியகரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது கடையில் பின்புற சுவரில் ஒரு ஆள் வந்து செல்லும் வகையில் துளை இருந்தது. இதனால் மர்ம நபர்கள் இரவில் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து வெள்ளியை திருடிச்சென்றுள்ளனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்