மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.1.40 லட்சம் திருட்டு

மத்தூர் பஸ் நிலையம் அருகே மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.1.40 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-08 18:45 GMT

மத்தூர்

மளிகை கடையில் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சாணிபட்டியை சேர்ந்தவர்கள் முரளிதரன் (வயது31), மணி (27). அண்ணன், தம்பிகளான இவர்கள் மத்தூர் பஸ் நிலையம் அருகில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை மூடிவிட்டு அருகில் உள்ள அறைக்கு சென்று விட்டனர். நள்ளிரவு கடையில் இருந்து சத்தம் வந்தது.

இதையடுத்து அண்ணன், தம்பி 2 பேரும் எழுந்து வந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கடையில் இருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து அவர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது அந்த நபர் மேற்கூரையில் துளைபோட்டு உள்ளே இறங்கி கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

போலீஸ் வலைவீச்சு

இது குறித்து கடையின் உரிமையாளர் முரளிதரன் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி வணிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்