ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் திருட்டு

விராலிமலையில் நகையை திருப்புவதற்காக ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

Update: 2022-11-22 18:15 GMT

சீட்டு பணம் கட்டுவதற்காக...

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா தேராவூரை சேர்ந்தவர் அஞ்சலை (வயது 40). தொழிலாளி. இவர் தனது ஸ்கூட்டரை விராலிமலை கடை வீதியில் உள்ள நகைக்கடையின் முன்பு நிறுத்திவிட்டு சீட்டு பணம் கட்டுவதற்காக நகைக் கடைக்குள் சென்றுள்ளார். பிறகு வெளியில் வந்து பார்த்தப்போது ஸ்கூட்டரின் சீட் கவர் திறந்து கிடந்துள்ளது.

ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் திருட்டு

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலை ஸ்கூட்டரில் அடமான நகை திருப்புவதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் இதுகுறித்து அருகில் உள்ளவர்களிடம் கேட்டு பார்த்தும் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்