மூங்கில்துறைப்பட்டில் கோவில் நிர்வாகி வீட்டில் பணம் திருட்டு

மூங்கில்துறைப்பட்டில் கோவில் நிர்வாகி வீட்டில் பணம் திருடியது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2022-10-17 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 70). இவர் மூங்கில்துறைப்பட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் நிர்வாகியாக இருந்து வருகிறார். ஜெயராமன், சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் இவருடைய வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினா் இதுபற்றி செல்போன் மூலம் ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் ஜெயராமனின் வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த கோவில் பணம் ரூ.35 ஆயிரத்தை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்