சத்துணவு ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
சங்கரன்கோவில் அருகே சத்துணவு ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமர். இவர் வெளியூரில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருைடய மனைவி பெருமாத்தாள் (வயது 37), சிதம்பராபுரத்தில் உள்ள பள்ளியில் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தார். மாலையில் அவர் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 3½ பவுன் தங்கச்சங்கிலி, 1 பவுன் எடை கொண்ட 3 மோதிரங்கள், 1 பவுன் எடை கொண்ட 3 கம்மல்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.