தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

ராஜபாளையத்தில் தொழிலாளி வீட்டில் நகையை திருடி சென்றனர்.

Update: 2022-11-12 18:59 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் காஸ்ட்ரோ. மில் தொழிலாளியான இவர் வீட்டின் முதல் தளத்தில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மேல் தளத்தின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4¼ பவுன் நகை திருட்டு ேபாயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மோகன் காஸ்ட்ரோ அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்