வானூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்:லாரி டிரைவர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

வானூர் அருகே பட்டப்பகலில் லாரி டிரைவர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருடு போனது.

Update: 2023-07-15 18:45 GMT


வானூர், 

வானூர் அருகே உள்ள நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). லாரி டிரைவர். அவரது மனைவி காயத்ரி. இவர்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. எனவே 2 பேரும் மகளை அழைத்து கொண்டு திருக்கனூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் சென்றனர்.

பின்னர் சிகிச்சை முடிந்து மாலை அவர்கள் வீட்டுக்கு திரும்பினா். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்தத புகாரின் பேரில் வானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்