மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கிய மொபட் திருட்டு
The theft of a moped given to wife as a birthday present
நாட்டறம்பள்ளி அருகே ஏரிகோடி பகுதியை சேர்ந்தவர் ரவி. ரத்தப்பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவரது மனைவி நந்தினி. இவருக்கு பிறந்தநாள் பரிசாக ரவி ஸ்கூட்டர் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை அப்பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் ரவியின் வீட்டின் வெளிபக்கமாக தாழிட்டு, பின்னர் ஜன்னல் வழியாக சாவியை எடுத்து ஸ்கூட்டரை திருடிச் சென்றுள்ளனர்.
மர்ம நபர்கள் ஸ்கூட்டரை திருடிச்செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் ரவி நாட்டறம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஸ்கூட்டரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.