மோட்டார் சைக்கிளில் இருந்த தங்க சங்கிலி திருட்டு

மோட்டார் சைக்கிளில் இருந்த தங்க சங்கிலி-செல்போன் திருட்டு

Update: 2023-07-21 18:35 GMT

கரூர் காந்திகிராமம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 35). இவர் கரூரில் உள்ள தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளின் முன்பக்க கவரில் 2 பவுன் தங்க சங்கிலி, செல்போன் போன்றவற்றை வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது, தங்கசங்கிலி, செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்