தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 4½ பவுன் தங்க நகைகள் திருட்டு

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 4½ பவுன் தங்க நகைகள் திருட்டு போயின.

Update: 2023-02-17 19:31 GMT

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை காமராஜர் தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 51). இவர் துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதி இருவரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து பணிமுடிந்து மாலையில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்தபோது, பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து அர்ஜுனன் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்