நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (வயது 36). கடந்த 20-ந்தேதி இரவு இவர், வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், சிவமணியின் செல்போனை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றபோது பொதுமக்களிடம் பிடிபட்டார்.
பின்னர் அவரை விளாம்பட்டி போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த இப்ராம்ஷா (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.