ஸ்டூடியோவில் திருடிய வாலிபர் சிக்கினார்
வடமதுரை அருகே, ஸ்டூடியோவில் திருடிய வாலிபர் சிக்கினார்.
வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் மோகனப்பிரியா (வயது 39). இவர், தென்னம்பட்டி நால்ரோடு அருகே போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி இரவு இவரது ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 8 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் மற்றும் 3 கேமராக்களை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து மோகனப்பிரியா வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மோகனப்பிரியாவின் ஸ்டூடியோவில் திருடியது, மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த சதீஸ் (24) என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.