கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர்

ராதாபுரம் அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்தார்.

Update: 2023-05-16 20:34 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே உள்ள பெத்தரெங்கபுரத்தைச் சேர்ந்த பகவதி என்பவருடைய மகன் முத்துக்குமார் (வயது 34). இவர் நாகர்கோவிலில் மளிகை பொருட்களை கடை கடையாக சென்று போட்டு வரும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் பெத்தரெங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் அவர் பிணமாக மிதந்தார்.

தகவல் அறிந்ததும் வள்ளியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை ராதாபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்