வி.கைகாட்டிைய அடுத்த குடிசல் கீழத்தெருவைச் சேர்ந்த அன்பழகனின் மகன் கனகராஜ்(வயது 23). அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனனின் மகன் முருகானந்தம்(35). இவர்கள் நேற்று முன்தினம் வி.கைகாட்டியில் உள்ள பேக்கரியில் பிஸ்கட் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும், அங்கு வந்த தேளூர் அண்ணா நகர் காலனி தெருவை சேர்ந்த கலியனின் மகன் மணிகண்டன் என்ற பாலமுருகனுக்கும்(32) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் பேக்கரியில் இருந்த பால்வட்டாவை எடுத்து கனகராஜ் மற்றும் முருகானந்தத்தை தாக்கியுள்ளார். இதை தடுக்க முயன்ற பேக்கரி உரிமையாளர் பாண்டியனையும் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில் கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகிறார்.