வாலிபருக்கு ரூ.8 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
வங்கியில் பணம் செலுத்தியும் மின்கட்டணம் கட்டாததால் வாலிபருக்கு ரூ.8 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
ஆலங்குளத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவர் ஆலங்குளத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையின் ஆப் மூலம் தனது வீட்டிற்கான மின் கட்டணம் ரூ.770-ஐ செலுத்தியுள்ளார். ஆனால் மின்சார வாரியத்திற்கு மின் கட்டணம் அந்த வங்கி ஆப் மூலம் கிடைக்கவில்லை என்பதால் வீட்டு மின் இணைப்பை மின்சார வாரியம் துண்டித்தது. மேலும் மின்கட்டணம் ரூ.770 மற்றும் கூடுதல் கட்டணம் ரூ.106-ஐயும் சேர்த்து ரூ.876 மின்சார வாரியத்தில் செலுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த கார்த்திகேயன் நெல்லை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரித்த நீதிபதி கிளாட்சன் பிளஸ்சட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் கார்த்திகேயனுக்கு ஏற்பட்ட மனஉலைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.7 ஆயிரமும், வழக்கு செலவு ரூ.1000-மும் சேர்த்து மொத்தம் ரூ.8 ஆயிரம் வழங்க வங்கி கிளைக்கு உத்தரவிட்டனர்.