போதையில் வாகன ஓட்டிகளுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபர் மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்

போதையில் வாகன ஓட்டிகளுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபரை மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

Update: 2022-08-14 17:40 GMT

கந்திலி பகுதியை சேர்ந்தவர் 18 வயது வாலிபர். இவர் ஆந்திராவில் பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சொந்த ஊரான கந்திலிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கந்திலி போலீஸ் நிலையம் அருகே குடிபோதையில் அரை நிர்வாணமாக நின்று கொண்டு, அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகளுடன் தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்டவர்களை ஆபாசமான வார்த்தைகளால் பேசி உள்ளார்.

இதனால் அவரை அங்குள்ள மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் சென்று அவரை மீட்டனர். பின்னர் அவரது பெற்றோரை வரவழைத்து கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்