விவசாயி மீது தாக்குதல்; வாலிபர் கைது

மோகனூர் விவசாயியை தாக்கி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-02 18:45 GMT

மோகனூர்

மோகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வலையபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது56). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது வளையப்பட்டி பகுதியை சேர்ந்த 6 பேர் பெண்களிடம் தரக்குறைவாக பேசி கேலி கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண்கள் ஜெயராஜ் இடம் கூறி உள்ளனர். இதுகுறித்து ஜெயராஜ் வாலிபர்களிடம் கேட்டுள்ளார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டி ஜெயராஜை அவர்கள் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த ஜெயராஜ் இதுகுறித்து மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து வளையப்பட்டி ரோஜா நகரை சேர்ந்த சின்னசாமி மகன் பிரகாஷ் (23) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்