பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் காதலிப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை மனதில் வைத்து கொண்டு அருண்குமார், கடந்த 10-ந் தேதி அந்த பெண்ணின் தாயார் தெற்கு வள்ளியூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது அவரை வழிமறித்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து அவர் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தார்.