இளம்பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்ட வாலிபர் கைது

இளம்பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-21 21:22 GMT

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடப்பட்டு இருந்தது.

இது குறித்து அந்த பெண்ணின் தந்தை நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஹாப்ரோ குமாரை (27) நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்