கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஊத்தங்கரையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-10 17:02 GMT

ஊத்தங்கரை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி லைன்கொல்லை முனியப்பன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ரெயில்வே காலனியை சேர்ந்த சக்திவேல் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்