வாலிபர் வாய்க்காலில் மூழ்கி பலி

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் வாய்க்காலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-20 19:07 GMT

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் வாய்க்காலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

வளைகாப்பு

காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேலமஞ்சமேட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோகுல். இவரது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்னை முகப்பேர் 13-வது குறுக்குத் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மனைவி விஜயா (வயது 48), காஞ்சீபுரம் மாவட்டம் புதிய பெரும் களத்தூர் சீனிவாசன் தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் செந்தில்குமார் (30) ஆகியோர் வந்துள்ளனர்.

இந்தநிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜயா, செந்தில்குமார், பாலாஜி, தனசேகரன் ஆகியோர் ஸ்ரீ ராமசமுத்திரம் பெரிய வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். இதனிடையே விஜயா ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனை கண்ட பாலாஜி, செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து விஜயாவை காப்பாற்றினர். இதைத்தொடர்ந்து செந்தில்குமார் மீண்டு்ம் வாய்க்காலில் குளித்துள்ளார்.

வாய்க்காலில் மூழ்கி சாவு

அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றபோது அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வாய்க்காலில் மூழ்கினார். இதைத்தொடர்ந்து அங்கு நின்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும், முடியவில்லை. இந்த நிலையில் செந்தில்குமார் ஸ்ரீ ராமசமுத்திரம் மருதாயி கோவில் அருகே பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுப்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி இறந்த செந்தில் குமார் சென்னையில் ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். செந்தில்குமாருக்கு தாரணி என்ற மனைவி உள்ளார். தாரணி தற்போது, 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்