வாலிபர் திடீர் சாவு

வாலிபர் திடீரென இறந்தார்.

Update: 2023-04-18 19:00 GMT

கரூர் வெங்கமேடு குமரன் தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 34). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வி.வி.ஜி. நகர் ெரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்