வாலிபர் திடீர் சாவு

வாலிபர் திடீர் சாவு

Update: 2023-08-28 21:00 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் ஜெயஹரி(வயது 23). டிப்ளமோ முடித்துவிட்டு காய்கறி கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி ஜெயஹரிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். பின்னர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கிட்னியில் பாதிப்பு இருக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில், கிட்னி பாதிப்புக்கு சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இனால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயஹரி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கை வந்த பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும். எனினும் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்