மயங்கி விழுந்த வாலிபர் சாவு

சிதம்பரம் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு போலீசார் விசாரணை

Update: 2023-04-24 18:45 GMT

அண்ணாமலைநகர்

சிதம்பரம்-சீர்காழி சாலையில் வேளக்குடி பாலம் அருகே 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை?. இறந்து போன வாலிபர் நீல நிற முழுக்கை சட்டையும், கைலியும் அணிந்துள்ளார். இது குறித்து வல்லம்படுகை கிராம நிர்வாக அலுவலர் கரிகாலன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன வாலிபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்