பரமக்குடி,
பரமக்குடி பங்களா ரோடு பகுதியை சேர்ந்த நம்புராஜன் மகன் பாண்டி மணி(வயது 20). இவர் பகுதி நேரமாக சிறுவர்களுக்கு சிலம்பம் கற்று கொடுத்து வந்தார். நேற்று உலகநாதபுரம் ஊருணியில் பாண்டி மணி தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.