ஸ்கூட்டர் மீது வாகனம் மோதி வாலிபர் சாவு

கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-14 17:44 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர், ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்