மொபட் மீது வேன் மோதி வாலிபர் சாவு

உத்தனப்பள்ளி அருகே மொபட் மீது வேன் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2022-07-09 17:47 GMT

ராயக்கோட்டை

மொபட் மீது வேன் மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கீர்னப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா. இவருடைய மகன் மகேஷ் (வயது 18). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை உத்தனப்பள்ளியில் சீபம் கிராமத்துக்கு மொபட்டில் சித்தி மங்கம்மா (34)வுடன் சென்று கொண்டு இருந்தார்.

உத்தனப்பள்ளி அருகே சீபம் கிராமத்தில் தென்பெண்ணை ஆறு பகுதியில் சென்றபோது அந்த வழியாக தேன்கனிக்கோட்டையில் இருந்து சாமந்தி பூ ஏற்றி வந்த வேன் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மகேஷ் தூக்கி வீசட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். அவரது சித்தி மங்கம்மா படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்