மாணவ- மாணவிகளுக்கு ரோஜா பூ, பேனா கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு ரோஜா பூ, பேனா கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Update: 2023-06-12 18:35 GMT

திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளை மேள தாளங்களுடன் வரவேற்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.டி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ.மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஆர்.சதீஷ்குமார் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.குழந்தைசாமி தனது சொந்த செலவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேனா, பென்சில், ரோஜா பூ வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் சதாசிவம், பொருளாளர் கே.குமரன், கல்வி மேலாண்மை குழு தலைவர் பி.ஆதிலட்சுமி உள்பட பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ-மாணவிகள், தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கே.இந்திராணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்