மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்ற ஆசிரியைகள்

மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்ற ஆசிரியைகள்

Update: 2023-06-12 18:45 GMT

நாகை மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் ஒரு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியைகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.

பள்ளி திறப்பு

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 12-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நாளையும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின்னர் நேற்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் தொடங்கின. அதன்படி நாகை மாவட்டத்தில் 261 அரசு மற்றும் தனியார் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை முதலே மாணவ -மாணவிகள் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்தோடு வரவேற்றனர்.

ரோஜா பூ கொடுத்து வரவேற்பு

மேலும் புதிதாக 6-ம் வகுப்பு சேர்ந்த மாணவிகளுக்கு ஆசிரியைகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். அதேபோல புதிதாக சேர்ந்த மாணவிகளை, மற்ற மாணவிகள் கைத்தட்டி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பள்ளியில் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.

திட்டச்சேரி

அதேபோல் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் வந்தனர். பின்னர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டன

Tags:    

மேலும் செய்திகள்