கந்தம்பாளையம் அருகே லாரி மோதி பள்ளி ஆசிரியர் படுகாயம்

Update: 2023-07-08 18:45 GMT

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள பரமத்தி பாவடி தெருவை சேர்ந்த ராஜா முகமது (வயது 44). இவர் வையப்பமலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் புதுப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி வந்த மோட்டார் சைக்கிள் மீது தோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்