100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி 10,184 காகித பூக்களால் ஓவியம் வரைந்த ஆசிரியர்
100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி 10,184 காகித பூக்களால் ஓவியம் வரைந்த ஆசிரியரை கலெக்டர் பாராட்டினார்.
100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி 10,184 காகித பூக்களால் ஓவியம் வரைந்த ஆசிரியரை கலெக்டர் பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலசபாக்கம் தாலுகா லாடாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன் (வயது 36). இவர் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓரிகாமி எனும் கலையை பயன்படுத்தி 10,184 காகித பூக்களால் விழிப்புணர்வு ஓவியம் வரைந்தார்.
மேலும் காகித பூக்களால் விழிப்புணர்வு வாசகங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு பள்ளியின் மாணவிகள் 15 பேர் உதவி செய்தனர். மேலும், சந்திரசேகரன் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் 150 கடுகுகளில் மூவர்ண தேசிய கொடியினையும் வரைந்தார்.
இவற்றை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.