தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக ஆசிரியை புகார்

நெமிலி அருகே தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக ஆசிரியை புகார் செய்துள்ளார்.

Update: 2023-07-06 18:20 GMT

நெமிலி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து பணி செய்யவிடாமல் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக ஆசிரியை ஒருவர் வட்டார கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்தநிலையில் அந்த புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டாக நேற்று நெமிலி வட்டார கல்வி அலுவலர்கள் மீனாட்சி, அரசு ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகிய இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்