வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி
தாணிக்கோட்டகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்தது
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். முகாமை வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். இதில், கிராம நிர்வாக அலுவலர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.