உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

Update: 2023-01-11 18:50 GMT

சாத்தூர், 

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ேநற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 30 லட்சத்து 95 ஆயிரத்து 343-ம், தங்கம் 90 கிராம், வௌ்ளி 395 கிராம் கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், மதுரை, துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர்கள் குழு, அய்யப்ப சேவா சங்கம் மற்றும் ேகாவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். விருதுநகர் உதவி ஆணையர் வளர்மதி முன்னிலையில் இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்கள், ஆய்வாளர்கள் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்