ஆக்கி போட்டியில் விளையாட தமிழக அணி தேர்வு
ஆக்கி போட்டியில் விளையாட தமிழக அணி தேர்வு
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் 18 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது ஆக்கி சாம்பியன்சிப் போட்டிகள் மார்ச் 19 முதல் 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அந்தமான் நிக்கோபார் உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த 240 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டிகளில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடுவதற்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 60 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு தமிழக அணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதற்கான தேர்வில் ஆக்கி சங்க தலைவர் மதுரம் அரவிந்தராஜ், முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாநில தடகள சங்க இணை செயலாளர் இன்பாரகு, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.