தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு முழுமையாக அடக்க வேண்டும்

தமிழகத்தில் கூலிப்படை வைத்து கொலை செய்யும் கலாசாரத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு முழுமையாக அடக்க வேண்டும் என முத்தரசன் கூறினார்.

Update: 2022-08-22 17:12 GMT

வேளாங்கண்ணி:

தமிழகத்தில் கூலிப்படை வைத்து கொலை செய்யும் கலாசாரத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு முழுமையாக அடக்க வேண்டும் என முத்தரசன் கூறினார்.

பேட்டி

நாகை மாவட்டம் எட்டுக்குடியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு கொண்டு வந்த கொள்கை முடிவை சென்னை ஐகோர்ட்டு சரி என ஒப்புக்கொண்டு தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.

மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சமூக நீதி மறுக்கப்படுகிறது.

இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்

தமிழகத்தில் கூலிப்படை வைத்து கொலை செய்யும் கலாசாரத்தை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு முழுமையாக அடக்க வேண்டும். மத்திய அரசின் தவறான கொள்கையால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்த விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது செல்வராசு எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், நாகை மாவட்டக்குழு உறுப்பினர் செல்வம், கீழையூர் ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்